எவரைமுன் பார்த்தாலும் என்னஉன் சாதிஎன்றே , உவமைத் தெளிக்கும் உவகை கவிஞ !... தவறேசெய் கின்றாய் தயங்கா ( து ) இருளை ... அவிழ்க்க , அமாவாசையோ நீ ! காசு கிடைக்கு ( து ) என்றால் கற்பனையும் கடவுளென்று , பூசிப் புளுகாலே , புகலுக்குள் மயங்கி ; ( நேர்மைவிலகி ) கூசும் சொல்நுழைத்து கோணல் நடைகளொடு , வாசி ... வாசி என்று வழிவோ னோ கவிஞன் ? * மாட்டுத்தோல் போர்த்தி மதம்கொண்டு பாய்ப்புலியாய், கூட்டுச் சதிக்குள் குரங்கான ஓநாயே ! ( நீ ) , தீட்டுச் சதைவருடி தீண்டாமை யுள்புரளும் … பாட்டை நிறுத்தேடா பாவி ! [ இந்தப்படிக்கு ... ஊழல் வகுப்புபேதம் ஏழ்மை அறியாமை ஒழியாமல் தொடரும் காரணம் , " யாருக்குத் தெரியும் ?" திரும்பவும் … நினைவுப் படுத்துகின்றேன் ... [ பாகம் ஒன்றில் உள்ளது . ] அப்பனின் சாதிச...