காதல் அழகியல்
காற்றை உள்ளிளுத்து வெளிஅனுப்பிடும் - என் அழகிய நாசியே ! உன்பணிஎனக்கு வாழ்நாள் முழுவதும் அற்புதம் ஓசியே ! பலநூறு மாதங்கள் நான்வாழ்கிறேன் என்றால் அதுஉன்ஆசியே _ இந்தவாய் மட்டும் நாட்களை வீணாக்குகிறது எப்போதுமே பேசியே ! _ _ என்னுள் காதலன் வழுக்கிவிழ நான்ஆக அவனுக்கு பாசியே ! எதற்காக கடவுளை காண சென்றான் என்னை விலகி காசியே ! இந்தகாற்று ஏன்தான் தழுவுகிறது என்னை பூமகரந்தங் களைபூசியே ! _ நீஅனுப்பிட்டஎன்மூச்சுக் காற்றோடு சென்றானே _ திரும்பிவர செய் நாளை முடிகிறது மாசியே ! காதலிநான் உனக்குத்தான் என்றாய்! காதலித்தேன் அதனால் ! காதலொடு நாவற் கனிவிழியாளை மட்டும் நேசிக்கும் காதலியாய் ஆகினேன்! காமுகனாய்நீ என்னை விலகி-வேறு மாதுஎவளைப் பார்ப்பாய் என்னுள் மயங்கிடு நாளுமே ! தேடித் தேடி என்னைநீ தீண்டுகின்ற இரவெல்லாம் , ஆடிப்பாடி மகிந்திடுஉன் ஆசைஅசையும் வயல்உள் ளே ! ஊடிடாத படிஎன்னை நீநாளும் ஓடிவந்து கூடினால் , வாடிடு மோநிலவு வானுள்ளே ? கனியுமே முகிழ் மாரியே ! மாரியோடு மயில்களும் மயங்கிட ஆடும் முகில்களாய் சாரலோடு இடிஇறங...
Comments
Post a Comment