Posts

Showing posts from May, 2024

மாமா!நீ தாலி அவசியமா எனும்முற் போக்குச் சிட்டு...

Image
நீரோடை யுள்உன் நினைவுள் பதியநான்                                முழங்கால் தெரிந்திட இருவிரல் தொட்டு                                      உயர்த்திடஅழகொடு பாவாடை! – உ ன்                                                 உள்ளக் களிப்பில் காதல் இணையுது நுகர கொடி பூத்திட்ட தாலேஇதழ் தேன்வாடை! உனதுகரம் தொடஊ டிடுதுக் காதல் பூ ஆடை மாமா!நீ தாலிஅவ சியமாஎனும் முற்போக்குச் சிட்டு                   ஆதலால் ஆசை துளிர்த்திட எனக்கு  மோதிரம்  அணியும் மணஓ   சையில் பகலிலும் தூதுவிடும் கனவுகள்; எத்தனை நாட்கள் வீணாகும...

காதல் மூலிகைகள்

Image
கட்டுக் குழலசைய காதல்நீ செய்என்றே ... முட்டுதேஉன் மெளன விழிகள் ! பட்டுப்பா வாடையாள் பாவைநான் உன்னைநோக்க கட்டிடு ( து ) ஏன் காதல்கூ டுசிட்டு ! கூடுகண்டு காதல் குமரி நகைக்கஉன்னுள் ; ஆடிடாதோ ஆசைசிட்டு ஊஞ்சல் ! ஊஞ்சல்அன்ன காதல்ஆட உண்ணும் விழிகள்உன் காய்ந்தமா டாகிடக் கண்டேன் ! காய்ந்தமா டாகிட்டேன் கன்னிநான் ; நாணாதே ! சாய்ந்திட்ட தேபொழுதும் தான் ! பாயும்மா டாகிடும்முன் பாய்ந்தேநீ வந்துமெல்ல ஓயவைநம் ஓசைஆசை யை ! கொடிபூக்க காய்ப்போல் குனியாதே உன்றன் மடிஈந்தி என்னுள் மகிழ் ! தொட்டாலோ   மெய்சிலிர்க்கும் ;  தொட்டுஅ   விழஆசை , திட்டாலோ   பண்உதிர்க்கும் ;  தென்றல்   கனியிதழ்தேன் , சொட்டால்உன்   வாய்மணக்கும் ;  சொக்கிமகிழ   நீதாலி ... கட்டாமல்   நான்மணந்தால்   காதல் !   முன்னால்நீ தோன்ற முழுநில வாய்காண்பேன் தன்னால் அகலும் தவிப்பே ! எனக்கு , என் அன்பேநாம் ஒன்றஉன்னால் அந்நாள் வருமோபின் வந்தால்நான் வாழ்வேன் நெடுநாள் ! அள்ளிக் குழல்முடிந்து ஆசையோடு உன்னைநான் ம...