காதல் மூலிகைகள்
கட்டுக் குழலசைய காதல்நீ செய்என்றே...
முட்டுதேஉன் மெளன விழிகள்!
பட்டுப்பா வாடையாள் பாவைநான் உன்னைநோக்க
கட்டிடு(து)ஏன் காதல்கூ டுசிட்டு!
கூடுகண்டு காதல் குமரி நகைக்கஉன்னுள்;
ஆடிடாதோ ஆசைசிட்டு ஊஞ்சல்!
ஊஞ்சல்அன்ன காதல்ஆட உண்ணும் விழிகள்உன்
காய்ந்தமா டாகிடக் கண்டேன்!
காய்ந்தமா டாகிட்டேன் கன்னிநான்; நாணாதே!
சாய்ந்திட்ட தேபொழுதும் தான்!
பாயும்மா டாகிடும்முன் பாய்ந்தேநீ வந்துமெல்ல
ஓயவைநம் ஓசைஆசை யை!
கொடிபூக்க காய்ப்போல் குனியாதே உன்றன்
மடிஈந்தி என்னுள் மகிழ்!
தொட்டாலோ மெய்சிலிர்க்கும்; தொட்டுஅ விழஆசை,
திட்டாலோ பண்உதிர்க்கும்; தென்றல் கனியிதழ்தேன்,சொட்டால்உன் வாய்மணக்கும்; சொக்கிமகிழ நீதாலி...
முன்னால்நீ தோன்ற முழுநில வாய்காண்பேன்
தன்னால் அகலும் தவிப்பே! எனக்கு,என்
அன்பேநாம் ஒன்றஉன்னால் அந்நாள் வருமோபின்
வந்தால்நான் வாழ்வேன் நெடுநாள்!
அள்ளிக் குழல்முடிந்து ஆசையோடு உன்னைநான்
மெல்லிய பூங்கரத்தால் மேனியை மாலையாக்கி
முல்லைச் சரவாயால் முத்தமிட காண்பேன்என்
மல்லிகைக்குள் உன்னால் மணம்!
கொள்ளை நிகழாத குவலைமலர் மங்கைநான்
துள்ளி நடந்து துவளாது பாசத்தினால்
கள்ளமாய் ஏதும் இன்றி காதல் கனியவர...
உணர்வு நரம்புகளோ உறங்க மறுத்தலால்
கனவு நடுவிலே காதல் சிரித்தலால்
தினமும் உன்நினைவோ தீய்க்கும் நெருப்பாம்
நனவில்நீ தழுவு நழுவும்நம் தனிமையே!
அணிமணி துணிஎன ஆவலொடு அணுதினமே
கனிஉ(ண்)ணும் அணில்அன்ன கனிகொடி மேல்ஊறும்
மின்மினி மினிமினி எனஎன்னை சுற்றுதுஉன் காதலே!
பிணிபசி பி(ன்)னித்தணி நிலவுகண்டு படுபனி ஒளியே!
இலைகொடி இடைநுனி முகர்சுவை கனிஎன
சிலைவடி சிந்தனையுள் சிற்பிஉளி அசைவுஅன்ன
அலைகடல் நுரையாய் ஆசைபிளா நிலாநோக்குதே
துளஅவன் வரவே தூதுசெல் என்முகிலே!
வாங்கும்என நீர்சுழலால் வருடும்நதி பூவனமே
தாங்கும் எனப்பரவி தழுவும்உயிர் மகரந்தமே
தூங்கிடு எனசென்றான் துவண்டிடுமோ சுவாசமே
ஏங்கிட செய்அவனை என்உறங்கா காதல்நிலவே!
மதுவழங்கும்
பூவுள் மயங்கிடும் வண்டு
எதுகையொடு மோனை இணைய
புதுக்கவிதை;
பாடுகிற போது
பரவசத்தில் பூவனம்
தேடிடுமோ தென்றல்
துணை!
என்னைக் களவாடி ஈரோடு போனவனை
இன்றும்நான்
காணலையே
ஏங்குகிறேன் -
செல்நிலவே!
சென்றுஅவனைக்
கண்டு திரும்பிவரச் சொல்லேன்
கன்னிஎன்
கண்ணுறங்கி டும்!
பூத்தேடும்
வண்டே! புன்னகை யோடுமா
ஆடும்
*தீகோடு தாண்டு தேன்பண்டம் கண்டு-உன்
‘பா’க்காடும் மொட்டு
மகரந்தத்துள் உருண்டு-என்
நாக்காட
தமிழ்பாடும் நாயகனை வரச்சொல்!
சித்தரித்தான்
சித்திரமாய் சிறைஎடுத்தான் என்னுள்அன்பு-
தத்தளிக்க குண்டுமல்லி கொடியிடையில்
பூப்பிளக்க…
பித்தளித்தாய்
தவிக்கவிட்டாய் பேச்சிழக்க நித்தமும்என்னை;
பைத்தியமாய் காதலைநான்
பார்ப்பதற்கோ விட்டகன்றான்?
சித்திரையா வைகாசியா மார்கழி புரட்டாசியா?
ஐப்பசியா
கார்த்திகையா ஆனிஆடி ஆவணியா?
பங்குனியா தைமாசியா பன்னிரெண்டு
மாதங்களில்;
எந்தமாதம்
இன்புறஎன் தலித்காதலன் வருவானோ?
தட்சணைமேல் ஆசையோ? தங்கநகை மோகமோ?-உன்
மச்சினிபோல்
ஒருத்திவந்து மயக்க ‘மது’ தந்திட்டாளோ?
கத்தரித்தாய்!
தினமும்ஏன் ஏங்கவிட்டாய் இராப்பகலாய்?
கத்தரிக்காய் கொஞ்சலுக்கா காத்திருந்தேன் செப்புநெஞ்சே!
*திருச்செங்கோடு
அவனின்
நினைவால் அன்றாடம் தீய்ந்தேன்
குவியலை
காதல் கொதிகலன்
ஆக
துவளிடை
காய துயரத்தால் தேய…
தவிக்கவோஆசைநிலை
கள்!
அணையுடைந்த வெள்ளமா? அலைஎழுப்பும்
ஆழியா?
பனைமரத்தில்
கசிந்தகள்ளை பருகஊறிடும் போதையா?
பசிஎடுக்க
இறைநோக்கி
பாய்ந்திடும் வனவேங்கையா?
உருசிகொடுக்க
ஒழுகிகிடும் என்தேன்கூடு காதல்தாபமே!
பண்ணையா? தெற்கு பார்த்து நிமிர்ந்திருக்கும்
புன்னையா? புன்னை
சூழ பூத்தழைக்கும்…
தென்னையா? செப்பு ஒளிசிதறும் இரவுநிலா-
பெண்ணாய்
என்னைஏன்
தடவுகிறாய் தென்றலே?
மேகம்
விலகிட மின்னல் பளிச்சிட
தாகபுவி வெப்பம்
தணித்திடும் பூமழையே!
வேகமாய் ஓடுபிரிய மேனி
கருத்தவனை…
தேகம்
சிவக்கவரச் செய்!
பற்றத்தான்காதல்தைபற்றத்தான்மாமன்கை
முற்றத்தான்சேய்ஆசைமுத்தமிடஇன்புற்று
பற்றத்தன்அன்னைமுலைபத்துமாதத்துள்ளே
தொற்றப்பிறப்பானோநெஞ்சே
கூடுத்
துறைகண்டேன்; குடையும்
மதுவண்டு-
தேடும்
வயல்கண்டேன்;
திரண்ட கனிகொடியில்-
ஆடும்
இலைகண்டேன்; அரவுப்பாற் கடல்அசைய…
ஓடுபடகில்
நதிஅழகில் ஊடுசுகம் கனவானதே!
ஊறும்
கிணறாகி; ஓடிவரும் ஆறாகி;
ஆறும்
பாலாகி; அருந்திடும் மோராகி;
ஏறும்
எறும்பாகி; தீயாக நெய்உண்ண
சேரும் நாளெண்ணி தினமுறுகிடு தேநெஞ்சு
சந்திரனின் றுருளும் தரணிமகிழ் ஒளியா?
சிந்தனையுள் நிலைத்த தேர்ந்தகவிச் சுனையா?
அந்திநிற மும்மயங்கி அதரங்க ளிடையேமுயங்கும்
தண்தமிழின் இனிப்பா?நின் தளிர்நகையின் சுரப்பே!
அலைகடல் அழைப்பா? அசைநுரைத் தெரிப்பா?
இளமைவன சொலிப்பா? இலைகொடி யிடைகாணும்,
நிலவுஒளி களிப்பா? நீந்தும்நதி நினைப்பா?
அழகுமுல்லைச் சிறப்பா?உன் அதரம்அவிழ் சிரிப்பே!
தமிழா? தமிழ்உண்டு தேன்பொழி நிலவுஒளி
அமுதா? அமிழ்தளிக்கும் மணமா? மணம்ததும்பும்
இதழா? இதழவிழ்க்கும் மலரா? மலர்சிதறும்
மதுவா? மயக்கம்தர... எதுவோ? உன் புன்முறுவலே!
செந்தமிழ் சொற்களைத் தேனென வேதினம்,
சொந்தம் கொண்டேபடித்(து) உண்டாயோ? - தந்தமே!
தந்ததும் முத்தங்கள் சந்தங்கள் சிந்திட...
வந்ததே வாய்வழி தேன்!
தமிழா? தமிழ்தெளிக்கும் சுவையா? சுவைகொடுக்கும்
அமுதா? அமிழ்தளிக்கும் மணமா? மணம்ததும்பும்
இதழா? இதழவிழ்க்கும் மலரா? மலர்சிதறும்
மதுவா? மயக்கம்தர... எதுவோ? உன் புன்முறுவலே!
சந்திரனின் றுருளும் தரணிமகிழ் ஒளியா?
சிந்தனையுள் நிலைத்த தேர்ந்தகவிச் சுனையா?
அந்திநிற மும்மயங்கி அதரங்க ளிடையேமுயங்கும்
தண்தமிழின் இனிப்பா?நின் தளிர்நகையின் சுரப்பே!
அலைகடல் அழைப்பா? அசைநுரைத் தெரிப்பா?
இளமைவன சொலிப்பா? இலைகொடி யிடைகாணும்,
நிலவுஒளி களிப்பா? நீந்தும்நதி நினைப்பா?
அழகுமுல்லைச் சிறப்பா?உன் அதரம்அவிழ் சிரிப்பே!
எப்போது விடியும் என்று உறங்கிடாது,
இரவுகளில் தத்தளிக்கும் கிழமே போல்...
எப்போதும் விடியாதோ என்று - இமை
துஞ்சாது ஏங்கும் என் பாசப் பழமே!
இப்போது தப்பவிடு கனவிலும் தோன்றாதே!
என்னை ஓர் விவரமறியா மழலையாக!
எண்ணு என்றன்உயிர் பிழைக்கட்டும்!
இளமை நம்இருவருக் குள்ளும் ஏங்கி ஓய்ந்தன!
இருந்தும்,நெருஞ்சில் சாதி மதங்கள் முற்கள் மகிழ்கின்றன!
எதற்கோ நம்இருவரிடை இந்த பழமைக் கொடுமை! - நாம்
இறந்ததால் இயங்குமோ இந்த மதம்சாதி பேதமை, வேதனை?
Continue reading: காதல் அழகியல்!