மாமா!நீ தாலி அவசியமா எனும்முற் போக்குச் சிட்டு...
நீரோடை யுள்உன் நினைவுள் பதியநான்
முழங்கால் தெரிந்திட இருவிரல் தொட்டு
உயர்த்திடஅழகொடு பாவாடை! – உன்
உள்ளக் களிப்பில் காதல் இணையுது நுகர
கொடி பூத்திட்ட தாலேஇதழ் தேன்வாடை!
உனதுகரம் தொடஊ டிடுதுக் காதல் பூஆடை
மாமா!நீ தாலிஅவ சியமாஎனும் முற்போக்குச் சிட்டு
ஆதலால் ஆசை துளிர்த்திட எனக்கு
மோதிரம் அணியும் மணஓ சையில் பகலிலும்
தூதுவிடும் கனவுகள்; எத்தனை நாட்கள் வீணாகுமோ!?
அம்மா… மெளனத்தில் வானம் நோக்கும்
கோயில்கோ புரசிலை என்னிடம்
இன்று மயங்கி தயங்கி பேசிடுது!
ஆகா கொடிகண் தழுவிடும் பூசைை தேசத்தை ஏக கொழுகொம்பு தன்னை தந்திட்டது!
பூகாண மொட்டுச் சிரிக்கின்றது – கவிதை
தேணாக நாணாமல் சுரக்கின்றது
நெகிழ்ந்திட்ட நிலவொளி முகிழுக்குள் நுழையுது!
முகிழ்ந்திட்ட இரவுக்குள் அகிலமும் சுழலுது!
பாற்கடல்மேல் துயலா பரந்தாமன் கதையாய்
பாம்பு படகாய்நான் மாறநீ உறங்க
படகோட்டி மகளாக
ஆகி படகாடிட
உனக்காக, முகம்ஊ
டாது நோக்க…
[இது கனவில்…]
விடிவெள்ளி முளக்க – என்
மடிமீது நீ விழிமூடி அதிகாலை
மயங்க நான் முயங்க…
காலை உணவை என்வாயில்
நீ ஊட்ட செட்டும் உன்
உமிழநீரை
நான் தேனாக துடைக்க
அலுவலகம் புறப்படும் நேரம்
இருசக்கர ஊர்தியில் உன்பின் நான்
பின்இருக்கையில் அமர…
என்இடதுகரம் உன்இடுப்பை பற்ற
வலது கரம் உன் தொடையை வருட…
அலுவலகத்தில் வருகையை உறுதிசெய்து
கையொப்பமிட்டுப் பிரிகையில்
என்னைநீ ஒருமாதிரி பார்க்க
பிரிவுஏக்கம் என்னையும் தாக்க
ஓர் அரை மணிநேரம் விலகல் தாளாமல்
என்இருக் கைக்குநீ வந்து
தேனீர் அருந்த அழைக்க…
காலை உணவு உண்ட
நிகழ்வுகள் மதிய வேளையிலும்
மாறாமல்அன்புப் பரி
மாறல்கள் நிகழ
பார்த்தோரில் பலர் இக்காட்சியை ரசிக்க
ஒரு சிலர் தூ பட்டப் பகலில்
வெட்கங் கெட்ட பிறவிகள்
என்று நம்மைத் தூற்ற
அலுவல் நேரம் மாலை வர
முற்றுப்பெற
கடற்கரை சாலைவழி
இருவரும் கைகோர்த்து நடக்க
போகிறவனும் வருகிறவனும்
திரும்பித் திரும்பி
நம்மைப் பார்த்து கிளுகிளுக்க…
இப்படி எல்லாம் நடந்துற என்று
ஆசைகள்என் மனதுள்
எப்போதும் உலாவ...
ஒவ்வொரு நாளும் என் காதலா…
என் காதலா என
எண்ணங்களுள் தாபம்து ளாவ
இப்படி ஓர் ஏக்கம் பல ஆண்டுகளாக
என் இதயத்தை துளைக்க
ஆசைகளெல்லாம்...
நிறைவேறாமல் மடிந்துற்றனவே!
மத பேதங்கள் நம் இருவரையும்
பிரித்திட்டனவே!
கடவுள் இருந்தால் நமக்குள்
இப்படி ஓர் பிரிவுத் துயரம்
நிகழ விடுவானோ?
பார்வையிடு: Universe Taylor > Solar [Willswords M] > Moons reflections!: என்னைக் கனவிலாடி ஈரோடு போனவனை...:
Comments
Post a Comment