கவிதை குயில் பாடல்கள்!


காண்உள்ஓர் பூமேல் கவில்கரு வண்டுநோக்கி

மான்உள் முயங்கும் மயங்கும் விழிஅந்த

தேன்உள் உருளும் திரண்ட கனிதான்உன்

ஊண்ஆய்ந்து ஒன்றும் நிலா!


எப்போது விடியும் என்று உறங்கிடாது,

இரவுகளில் தத்தளிக்கும் கிழமே போல்...

எப்போதும் விடியாதோ என்று - இமை

துஞ்சாது ஏங்கும் என் பாசப் பழமே!

இப்போது தப்பவிடு கனவிலும் தோன்றாதே!

என்னை  ஓர் விவரமறியா  மழலையாக!

எண்ணு என்றன்உயிர் பிழைக்கட்டும்!

 

செந்தமிழ் சொற்களைத் தேனென வேதினம்,

சொந்தம் கொண்டேபடித்(து) உண்டாயோ? - தந்தமே!

தந்ததும் முத்தங்கள் சந்தங்கள் சிந்திட...

வந்ததே வாய்வழி தேன்!

              

இளமை நம்இருவருக் குள்ளும் ஏங்கி ஓய்ந்தன!இருந்தும்,


நெருஞ்சில் சாதி மதங்கள் முற்கள் மகிழ்கின்றன!


எதற்கோ நம்இருவரிடை இந்த பழமைக் கொடுமை! - நாம்


இறந்ததால் இயங்குமோ மதம்சாதி பேதமை, வேதனை?

  

அவள்:

 கலையாய்க் நோக்கும் மேகமே! - என்

கனவைக் கலை வா! - நான்ஒரு

நிலையில் இம்மரத்தடி நிற்கவே,

மழையைப் பொழி வா!

 

அவன்:

மறைக்கும் நினைவை-நீ ஒதுக்கினால் - நான்

மகிழ்வேன் நெகிழ்வேன்! - உடல்

விரைக்கும் குளிரை விலக்கினால்-பூஅணை

வெதுவெதுப்பில் துயில்வேன்!


அம்மா மெளனத்தில் வானம் நோக்கும்                           

கோயில்கோ புரசிலை என்னிடம்                                     

இன்று மயங்கி தயங்கி பேசிடுது!


ஆகா கொடிகண் தழுவிடும் பூசைை தேசத்தை                         
ஏக கொழுகொம்பு  தன்னை தந்திட்டது!

பூகாண மொட்டுச் சிரிக்கின்றது – கவிதை                             

தேணாக நாணாமல் சுரக்கின்றது

                                                                                        
நெகிழ்ந்திட்ட  நிலவொளி முகிழுக்குள் நுழையுது!

முகிழ்ந்திட்ட  இரவுக்குள் அகிலமும் சுழலுது!


இரவும் பகலும் இணைதலுக்கு பெயர்என்ன?
ஒருநாள் என்பது அடையாளம்!
ஆணும் பெண்ணும்சமமே என்பதற்கு,
அறிவுள்ள மானுடகுணம் அடையாளம்!

மானுடத்தை குலைக்கும் கறைகட்கு,
வேற்றுமைச் சொற்கள் அடையாளம்!
வேற்றுமை ஊழல் செய்வோர்கு மத...
அடிமைகளாய் திரிவோர் அடையாளம்!

மானுடத் துக்கு அடையாளம்கட்டுப்பாடு
கற்புடை ஆண்பெண் குறிகள்தாம் ஆதாரம்!
நல்லமானுட குணத்துக்கு எதுஅடையாளம்?
ஒற்றுமை நேசிக்கும்அன்பேஎன்அறிவே!

Comments

Popular posts from this blog

காதல் அழகியல்

காதல் மூலிகைகள்