அவளோ அவனோ [அவாள்] ஆடினால் சாமி!
- Get link
- X
- Other Apps
அவளோ அவனோ [அவாள்] ஆடினால் சாமி!உன் தாயோ சகோதரியோ ஆடினால் பிசாசு!
இந்நாட்டில், பிணம் ஆனபின்னும்...
தெய்வங்கள் என்று மாறியவன் எல்லாம்!
நெற்றியில் பிறந்தனராம்! உயர் குடியாம்!
தனக்குத் தானே உயர்குடியினன் என்போன்;
இறைவன் [அவன் மட்டும்] என்றுப் பகர்ந்திடும்...
சூழ்ச்சி எதற்கு என்று அறிவாயோ?
தெய்வங்கள் என்று மாறியவன் எல்லாம்!
நெற்றியில் பிறந்தனராம்! உயர் குடியாம்!
தனக்குத் தானே உயர்குடியினன் என்போன்;
இறைவன் [அவன் மட்டும்] என்றுப் பகர்ந்திடும்...
சூழ்ச்சி எதற்கு என்று அறிவாயோ?
மானுடம் பஞ்சமர், சூத்திரர் ஒருவனும் தெய்வம்
ஆகிவிடாதவாறு எண்ணிக்கை குறையவே!
அவர்களுக்கென்று கடவுள் இல்லாமல் ஒழியவே!
தாழ்ந்த குடியென மானுடத்துள்,
பெரும் பாண்மை
யினரை...
மரணம் எய்திட்டால் பிசாசுகளாய்;
அவமதித்தல்
உயர்குடி பண்போ?
அவனவன் அன்னையர் அப்பன்கள்;
பட்டன்கள் பாட்டிகள் கடவுள்களாக...
அவனவன் அன்னையர் அப்பன்கள்;
பட்டன்கள் பாட்டிகள் கடவுள்களாக...
ஆகிவிடாதவாறு தடுக்கின்ற சூதுகளே!
பிசாசு! கற்பனைப் புனைக்கதைகள் யாவும்!
தெய்வம் என்று ஆனபின் எவனும்,
என்றேனும் செத்து ஒழியாமல் உலகில்;
நிரந்திரமாக உயிர் வாழ்கின்றானோ?
நிரந்திரமாக உயிர் வாழ்கின்றானோ?
செத்து அழிந்த பின்னும் பிணம் ஆனவனை...
மானுட தெய்வம் எனப் பறைதல்...
பொய்(யான) சூது ஓதல்கள் தானே!
செத்து அழிந்திட்ட இறைவன் என்போனின்,
உப தேசங்கள் கூட நாட்டில்...
சாதிகளை ஒழிக்க முற்படவில்லையே!
தேச ஒற்றுமை, அன்பு, நலம் பற்றிய அக்கறை;
பேதங்களை இல்லாமல் செய்திடும்...
அடிப்படையில் ஏதும்; மானுட ஆர்ப்பாட்ட,
விழாக்கால வழிப்பாடுகளில் ,இல்லையே!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment