புதுக் கவிதை பொழிவு!
ஆழ்கடல் ஆழம் அறிதல் பெரிதல்ல
[ ஆசைகளை ]
தாழிடும் பெண்மூளை தான் !
உரிமைகளை அடைய ...
வீதியிலிறங்கி ,
ஊர்வலம் போக ...
போடுகிற செருப்பு ,
சாதிகளும் , வகுப்பும் !
ஆனால் ...
அகத்துள் அனுமதிக்காதீர் !
விழுவன வானம் சிதறும்
கண்ணீர்த் துளிகளா ?
ஒரு மானுடப் பெண்ணின்
அயராத் துயர் மழை !
என் சோலார் குடும்பத்து
நிலா ஒளிச் சுழலே !
சூரியனில் இருந்து ...
எப்போது வெளிப்படும் ,
காந்தப் புயலால் ... ஒளி ,
பிரகாசமாகி அதிவேகமாக -
பூமியைநோக்கிப்
புறப்படுகிறதாம் !
என்றாலும் ,
உன் இதயத்திலிருந்து
சுரக்கும் , நம் காதல்
ஒளிப் பிரவாகம் முன் ...
சூரிய காந்த ஒளி வெள்ளம் ,
வலிய தனை இழந்துவிடும் !
சூரிய காந்தப் புயலால் ,
செயற்கைக் கோள் ,
விமானப் போக்குவரத்து ,
மின்சாரம் ,
பாதிக்கப்படலாம் என்று ,
விஞ்ஞானிகளால்
அஞ்சப்படுகிறதாம் !
விடை அறியப்படாத
நம் காதல் -
பருவகால நிலவரம் ...
மோசமாக எச்சரிக்கின்றது !
இளமை , குளுமை ,
வளமை , ஆயுள் நிலைமை ...
பாதிக்கப்படக் கூடும் !
சூரிய காந்தப் புயலால்
பூமிக்கு -
எந்தவோர் ஆபத்து ,
இதுவரை -
நிகழ்ந்திடவில்லை !
ஆனால் நம்
காதலுக்குள் வீசும் ...
மதம் , வகுப்பு
வேற்றுமைப் புயல் ,
நாடுவிட்டு -
கடக்கவில்லை யானால் ...
உன்னைச் சேராமலேயே ,
நான் இறந்துபடுவேனே !
Comments
Post a Comment