Hailee Steinfeld, BloodPop® - Capital Letters



இயற்கை பெண் தன்னைப் பாடென
ஊடுறுவி நோக்க...

முதல்நாள் உன்னைநான்
பார்க்க உன்கூந்தல்
இரவை இருட்டாக்கிட்டது!
அடர்ந்த ஓர்முகிலாகி
நிலவை மறைத்திட்டது!

இரண்டாம்நாள் முகிலாய்
மாறிட்ட உன்கூந்தல்
இருமலை முகடுகளை வருட
அந்த உரசல் கண்டு தடுமாறி
ஓர் அருவி தாவிக்குதித்து 
நகர்ந்திட்டது!!

மூன்றாம் நாள் பார்த்ததுமே உடன்
உன்பார்வை பகலைத் தோற்றுவித்தது
காதல் குயில் கவிதைப் பாடிட்டது!

நான்காம்நாள் எழிற் கூந்தல்
தென்றல்பட்டு சற்றேஅகல
உன்எழில் மலைகள் பார்என்றே
நிமிர்ந்து விண்ணை நோக்கிட்டன!

ஐந்தாம்நாள் பகலில் மலைகள்அடி
வாரத்தில் ஓர்விரிவுற்ற கொளுந்து
வாழைஇலை அழகில் சமவெளி
அற்புதமாய் காட்சித் தந்தது!

ஆறாம்நாள் என்பார்வையில்
மது அருந்திட்ட குதிரைஅன்ன
அடங்க ஓர்நதியின் எழில்
கூடுதுறை சிரிக்க
என்கண்கள் தொட்டன!

ஏழாம்நாள் அரைமறைவு
முகில் பிறையாய் இமை மூடிட்ட
எழில் நிலவைக் காண,
உன்விழகளை என்விழிகள்
அழகு இதுவே எனமுயங்கிட்டன!

உன்னைச் சேரும் வழியறியாமல் - துன்ப
சேற்றுள் நெல்நாற்றென உழலகின்றேன்!
என்னைநீ காதலித்திட்டது பிழைகள் அல்லவே
எதனால் இரவுகளில் உறக்கம் இழக்கின்றேன்!

நேற்றைய துயரங்கள் முழுவதும் இன்று
நீஅறியாமல் கவிதைகள் ஆகின்றன!
இன்றைய உன்நனவுகள் யாவும் - சொல்லும்
கடவுளேப் போல் கற்பனை ஆகிடுமோ?

உயிரே! உணர்வே! என்றாய் காதல்
சூறாவளியாய் உன்னோடு சுழன்றேன்!-என்றன்
உடலோடு உன்றன் அன்பைதை தைத்திட்டால்
அந்த உணர்வுக்குள் என்றன் உயிர் இயங்குமே!

என் உடலுள் உன்ஆசைகளை விதையேன்!
காதல்பூ மணந்து உன்றன் கரங்களில்
நீ மகிழ உயிர் கனிகளை வழங்குமே! - நம்மை
ஒவ்வோர் நெடியும் இரவில் உறக்கம் தழுவிடுமே!


என்னோடு அருகில்நீ இல்லை என்பதால்,
நம்காதல் கவிதையாய் மாறிற்று! - நாளும்
கவிதையே என்னை ஆளுகின்றது! கவிதை
காதலும் கனவேபோல் மாறிடுமோ?

நீஎன்னுள் இருந்து விலகி - நீண்ட
தூரம் சென்று நோக்க - என்றன்
மனது உளர்ந்து மக்கிப் போயிற்று!
உன்னை அடைய உள்ளம் ஏங்குகின்றது!

என்னைநீ இருகி அணைக்கும்நாளில்
உன்றன் இதய சுவாசக் காற்றை - என்
மூக்கும் உள்வாங்கும்; அப்போது - நம்
காதல் நெகிழந்து மகிழந்து இயங்கும்!

உன்னுள் உயிர்த்து மகிழ்ந்து இதயம்
இன்று சுருங்கி நொருங்க - எனக்குள்
சுவாசம் சுருண்டு போயிற்று! வா!முத்தமிடு;
மீண்டும் உடலம்என் உயிரை மீட்கும்!

உனக்குள் என்அன்பு ஒன்றுமானால்
கிறங்கும் கிளர்ச்சி மயக்கம் தெளியும்
உனக்குள் தளர்நது தகர்ந்த உறக்கம்
காதல் வளர கிளர செழிக்கும்!

எத்தனை ஆண்டுகள் கடந்திட்டன! - உன்னை
என்றன் இளமைத் தழுவாமல் ஓய்ந்திட்டது!
பித்தன் கதையில்வரும் சிவகாமிபோல்
பெரும்பிழை நான்என்ன செய்தேனோ? - உன்றன்
சக்தி அனைத்தும விரயம் ஆயிற்று! - நம்காதல்
சரித்திரத்தில் என்இளமை [உனக்கு]
பயன்படமால் போயிற்று!

காதலைப் பதுக்கினாய் - அது
கவிதையாய்ப் பிதுங்கிற்று! - உனக்காக
நாணத்தை ஒதுக்கினேன்! இப்போது
ஆசையுள் ஆசை சூடேறிற்று!

தீயோ உன்றன் நினைவு நாள்தோரும் என்றன்
தேகம் தகிக்கின்றது! - நின்றன்
தாபத்தால் தழுவி அணைத்திட்டால்! அப்போது
என்றன் தேகமும் குளிர்ந்திடுமே!!


வாழைப்பூத் தெரிக்கும் தேன் சிதறல்போன்றே
உன்றன் வாழைக் கனிநா முன்தோன்ற
அந்நிகழ்வால் உன்வாய்ச் சுவை அறிவேனோ?

வாழைக்குலைகள் அசையும் மலைஅடிவாரம் - ஒரு
வாழையிலை போல்காணும்
விாந்திந்திட்ட சமவெளி ஓரம் - இரு
சோலைகளை அசைத்து மகிழும்
தென்றலைத் தழுவி ஆடும் - மகளிர்
சேலைகள் அன்ன அலை அலையாய்...

இடையில் ஏங்கும் காவிரி போல்
வருமோ நதிநீர் வருமோ?
எனும் கவலையை விலகி
கங்கைவர வந்து தழுவ ஏற்புடையதாக
ஒரு நாளை நிாணயம் செய்க!

Comments

Popular posts from this blog

Selena Gomez - I'm Sorry We Lied (ft. ZAYN)

காதல் மூலிகைகள்