Deep House, Nu Disco, Vocal Chill Music - Rezilienza Mix 2023
Deep House, Nu Disco, Vocal Chill Music - Rezilienza Mix 2023
பாற்கடல்மேல்
பரந்தாமன்கதை அன்ன,
பாம்பு படகாய்
மாறநீ படுக்க… நான்
படகோட்டி மகளாக,
படகோட்டிட ;
உனக்காக, உன்முகம்
நோக்க…
[இது கனவில்…]
விடிவெள்ளி முளக்க
– என்
மடிமீது நீ விழிமூடி
அதிகாலை
மயங்க நான் முயங்க…
காலை உணவை என்வாயில்
நீ ஊட்ட செட்டும்
உன்
உமிழநீரை
நான் தேனாக துடைக்க
அலுவலகம் புறப்படும்
நேரம்
இருசக்கர ஊர்தியில்
உன்பின் நான்
பின்இருக்கையில்
அமர…
என்இடதுகரம் உன்இடுப்பை
பற்ற
வலது கரம் உன் தொடையை வருட…
அலுவலகத்தில்
வருகையை உறுதிசெய்து
கையொப்பமிட்டுப்
பிரிகையில்
என்னைநீ ஒருமாதிரி
பார்க்க
பிரிவுஏக்கம்
என்னையும் தாக்க
ஓர் அரை மணிநேரம்
பிரிவு தாளாமல்
என் இருக்கைக்கு
நீ வந்து
தேனீர் அருந்த அழைக்க…
காலை உணவு உண்ட
நிகழ்வுகள் மதிய
வேளையிலும்
மாறாமல்அன்புப்
பரி
மாறல்கள் நிகழ
பார்த்தோரில் பலர் இக்காட்சியை ரசிக்க
ஒரு சிலர் தூ
பட்டப் பகலில்
வெட்கங் கெட்ட
பிறவிகள்
என்று நம்மைத் தூற்ற
அலுவல் நேரம்
மாலை வர
முற்றுப்பெற
கடற்கரை சாலைவழி
இருவரும் கைகோர்த்து
நடக்க
போகிறவனும் வருகிறவனும்
திரும்பித் திரும்பி
நம்மைப் பார்த்து
கிளுகிளுக்க…
இப்படி எல்லாம்
நடந்துற என்று
ஆசைகள்என் மனதுள்
எப்போதும் உலாவ
ஒவ்வொரு நாளும்
என் காதலா…
என் காதலா
என்எண்ணங்களுள்
துளாவ
இப்படி ஓர் ஏக்கம்
பல ஆண்டுகளாக
என் இதயத்தை
துளைக்க
ஆசைகளெல்லாம்
நிறைவேறாமல்
மடிந்துற்றனவே!
மத பேதங்கள்
நம் இருவரையும்
பிரித்திட்டனவே!
கடவுள் இருந்தால்
நமக்குள்
இப்படி ஓர் பிரிவுத்
துயரம்
நிகழ விடுவானோ?
மண்டியிடும் ஆணவமே! மானம், புனிதம்எது?
பெண்கள்தம் கற்புநிலை பேணும்உயர் பண்பாடே!
ஆசைகளோ ஆழி; அடக்கிடநீ, போடுவாயோ…
ஓசைகட்கு தாலிவேலி ஓதி!
எந்தவோர் நாமமிட்ட மனிதனுக்கோ,
ஆண்டவனுக்கோ,
வினாயகன் கருவாக பொணொருத்தி பிரசவிக்கவில்லை!
எந்தவோர் விபூதி கடவுளச்சிக்கும் முருகன் பிறந்திடவில்லை!
இதில் யார் அணிந்திட்ட தாலி எந்தத் தேதியில் புனிதமுற்றது?
வினாயகனோ, அய்யப்பனோ, கந்தனோ, கர்ணனோ, அவர்தம்
அன்னையர் தாலி கட்டிட்ட நேர்வில் பிறந்தனரோ? [அந்தப்படிக்கு]
தாலி கட்டாமல் கடவுள்களே தோன்றியிருக்க, தெய்வங்கள்யாவும்;
தாலி புனிதத்தில் பிறந்தாற்போல் ஓதிடுதே ஊழல்வம்சம்?
ஓதுதல்வழிச் சுரண்டல் செய்திடும் ஓதுகூலித் தொளிலாளியே!
சாதி விலகிச் சொல்! எவன் கட்டினான் தாலி பாஞ்சாலிக்கு?
எப்போது
கட்டினான்? கால நேரம் பார்த்துத்தானே…
கழுத்தில் மாட்டிக்கொண்டாள் பாஞ்சாளி தாலி, அன்று!
தாலி காப்பாற்றிட்டதோ பாஞ்சாலியை துரியோதனன் சபைமுன்?
அவள்சேலை யைப்பற்றி அவிழ்த்திட்டானாமே ஒருவன்! கதைஉள்ளதே; தாலிப்புனிதம்
என்ன ஆயிற்றாம்? கண்ணன் ஓடி வந்தானாமே!
அவிழ அவிழ பாஞ்சாலி சேலை வளர்ந்திட்டதாமே கண்ணனாலே!
கண்ணா… எனதம் கரங்களை முலைகள்தெரிய உயர்த்தி கெஞ்சினராமே! கன்னியர்
குளிக்கையில் தாவணிகளைக் கவர்ந்திட்ட வெண்ணெய்த் திருடனை
பெண்களின் அன்னையர் தாலிப் புனிதங்கள் தண்டிக்க வில்லையேஏன்?
கண்ணனின் லீலைஎன்பதால் அன்னையரும் போற்றித் துதித்திட்டனராமே!
அந்தக் கோபியர் அன்னையருள் ஒருவரும் தாலிகட்டி புணர்ந்து தம்பெண்களை
பிரசவிக்க வில்லையோ? தாலிதான் பெண்களின் கற்புநெறிகட்கு வேலியோ?
ஆசைகள் ஓர் ஆழி! ஆழிக்கு ஓர் வேலி! வேலியாய் ஓர் தாலி!
ஓதுவோனே பண்புப் பரப்புக்குள் சந்தேக வேலி எதற்கு?
எங்கே திரிசூழி வரவழை; சிவன்உயிரோடு இருக்கையில்
அணிவித்தத் தாலி புனிதமற்றதோ? பார்வதி எரியுண்டா ளாமேஏன்?
எப்போது மாறிடுவாளோ? எவனோடு ஓடிடுவாளோ?
தப்பவிட்டால்
சாதிகள் சாகுமே! சுரண்டல் பேதங்கள் நிலைக்காதே!
அவசரக்
காமதேனு; அவள்கழுத்திலும் மாடாக்கிக் கட்டுதாம்பு என்று
தவறாக கயிறொன்றை கயவன்ஓதித் தந்திந்திட்டால் தாலி புனிதமோ?
புல்லே!சொல் உன்பெண்ணும் போரா
டிடஇன்றும்
தில்லுமுள்ளாய் மாடுகட்ட தேடும் கயிறுஅன்ன;
எல்லைஅன்புள் தாலி இறுதிஎன்பான் பெண்ணடிமை
கொள்கை புனிதம்அல்ல கொள்ளை!
சிவக்கொழுந்தே!
அனந்த கிருஸ்ணா! வெங்கட்ராமா!
சிவப்பு
விளக்குக ளடியில்உன் இந்துத்துவாப் பெண்கள்!
குடும்ப மகளிராய் மாறட்டும்உன் குடுமியை நூலை அவிழ்;
தடுமாறாதே
திருமணம் செய்திடு தாலிகள் புனிதமாகட்டும்!
ஆசைகள்
ஓர் ஆழி! ஆழிக்கு ஓர் வேலி!
வேலியாய்
ஓர் தாலி!
மண்டியிடும்
ஆணவமே! மானம், புனிதம்எது?
பெண்கள்தம்
கற்புநிலை பேணும்உயர்
பண்பாடே!
ஆசைகளோ
ஆழி; அடக்கிடநீ,
போடுவாயோ…
ஓசைகட்கு தாலிவேலி
ஓதி!
அடே பேத
வம்சப் பாவி!
சிவப்பு
விளக்கு பகுதிகளில்
பிழைவாழ்க்கைத்
தவறுகட்கு
தாலிகள்தான்
வேலி!
திருமண
வேலியிட கூலி
நீ பிதற்றும்
போலி
சீர்
சிறப்பு சரி யில்லையேல்
அறுந்திடுவது
ஏன் சிலரது தாலி
வரதட்சனண நீலி
ஓதல்களில்
பறைந்திடும்
புனிதம்யாவும் காலி
தாலி
அணிந்த பின்னும்
சமூகங்களிடையே
கற்பழிப்பு
தினச் செய்தி
ஓதும்
புனிதம் யாவும்
சந்தேகங்கள்
முளைவிட தாலி…
ட்டி.சுனாமி
ஆகும் போலி!
Comments
Post a Comment